வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மீட்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தஞ்சை மேயர் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண்18004251100 இதில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கூறினார்.
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சண். இராமநாதன் தலைமையில் நடந்தது.
இதில், ஆணையர், அதிகாரிகள், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மேயர்,
நான்கு மண்டல தலைவர்கள் தலைமையில் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்றார்.
தஞ்சை மாநகரில் மழை பாதிப்புகள் அதிகம் உள்ள தாழ்வான பகுதிகளான பள்ளியக்ரஹாரம், சுங்காத்திடல், வேலூர், தட்டான்குளம், குருவிக்கார தெரு, பரத் நகர், பத்துக்கட்டு, குயவர் தெரு, டவுன் கரம்பை, சாலைக்கார தெரு, சமுத்திரம் ஏரி, சேவப்ப நாயக்கன் வாரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்குவதற்கு மாநகராட்சி பள்ளிகள், சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
டீசல் எஞ்சின் தண்ணீர் வெளியேற்றும் பம்பு, கழிவுநீர் அகற்றும் லாரி, ஜெனரேட்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளது என்றார்.
24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண்1800 425 1100 எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.