கோபி என்பவரது 10,000 சதுரஅடி இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என மாறி உள்ளதால், அதனை கணினியில் எஸ்எல்ஆரில் மாற்றம் செய்துதர, திருச்சி வருவாய்கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரான வட்டாட்சியர் அண்ணாதுரையை அணுகியுள்ளார்.
வட்டாட்சியர் 2 லட்சம் லஞ்சம் கேட்டநிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின்படி லஞ்ச பணத்தை பெறமுயன்றபோது வட்டாட்சியர் அண்ணாதுரை கையும்களவுமாக கைது செய்யப்பட்டார்
தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவெறும்பூர் வட்டாட்சியராக கடந்த 2019 ம் ஆண்டு அண்ணாதுரை பணியாற்றிவந்தபோது மணல் லாரி உரிமையாளரிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சம்கேட்டு பேசிய செல்ஃபோன் உரையாடல் சமூகவலைதளங்களில் வெளியானது. அப்போது ஆட்சியர் சிவராசு இவரை காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

