கோவை, பொள்ளாச்சியை அடுத்த காடம்பாறை மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் மூர்த்தி கூலி தோட்டத் தொழிலாளியான இவர் காடம்பாறை பகுதியில் இருந்து வெள்ளிமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு காடம்பாறை பவர் ஹவுஸ் பகுதிக்கு திரும்பும் போது காட்டுப் பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தார்
வயிற்றின் இடதுபுறம் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் முதல் கட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு நிலையில் மருத்துவர்கள் பரிந்துரை அடிப்படையில் கோவை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

