தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது திருச்சி மாவட்டத்தில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்கிறது. மேட்டூர் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 45,000 கன அடியாக வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று 55,500 கன அடியாக அதிகரித்து வெளியேற்றப்படுகிறது.
திருச்சி
முக்கொம்பு மேலணைக்கு இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 48,400 கனஅடி நீர்வரத்து.
முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 23,500 கன அடியும், கொள்ளிடத்தில் 24,600 கன அடியும், கிளை வாய்க்காலில் 300 கனஅடியும் நீர் வெளியேற்றப்படுகிறது.
நேற்று காலையில் வெயில் அடித்தது பின்னர் நேற்று மாலை 4:30 மணிக்கு மேல் திருச்சி மாநகர மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலப்புதூர் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது
இதனால் பீமநகர் பாலக்கரை மேல புதூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து கரிசல் ஏற்பட்டது.காஜாமலை மெயின் ரோட்டில் சுமார் 2 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் குளம் போல் தேங்கியது.
இதேபோன்று கருமண்டபம் ஐஓபி நகர் பகுதியில் சாலைகளை மழை நீர் மூழ்கடித்தது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் புளியஞ்சோலை அய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள ஆலத்துடையான் பட்டி இரட்டை ஏரிகள் எனப்படும் சின்ன ஏரி பெரிய ஏரி அடுத்தடுத்து நிரம்பின இந்த ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர் தடுப்பணையை தாண்டி வழிந்து
ஓடுகிறது. நேற்று பெய்த மழையினால் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தவித்தனர்.
ஒரே நாளில் 418.4 மிமீ
திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு பின்வருமாறு:
திருச்சி மாவட்டம் கல்லக்குடி 30.2 மிமீ லால்குடி 10.6 மிமீ, நந்தியாறு அணைக்கட்டு 38.6, மிமீ, புள்ளம்பாடி 35.4, மிமீ, தேவி மங்கலம் 5.4 மிமீ,சமயபுரம் 32.2 மிமீ,வாத்தலை அணைக்கட்டு 1மிமீ, கோவில்பட்டி 8.1 மிமீ, மருங்காபுரி 19.2 மிமீ நவலூர் கொட்டப்பட்டு 34.5 மிமீ ,துவாக்குடி 19. மிமீ, பொன்மலை 38.2 மிமீ, திருச்சி ஏர்போர்ட் 36.4 மிமீ, மழை பதிவாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முழுவதும் 418.4 மில்லி மீட்டர் மழை பதிவானது அதிகபட்சமாக திருச்சி டவுன் பகுதியில் 59 மில்லி மீட்டர் , திருச்சி ஜங்ஷன் பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவானது.

