Skip to content

கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் காவேரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகள் கொண்டதில் ஒரு டிஎம்சி அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கலாம்.

கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு நேற்று 54,695 கன அடி உபரி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து இன்று காலை நிலவரப்படி 69,870 கன அடி உபரி நீர் வந்து கொண்டுள்ளது. இதில் 69,070 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், தென்கறை வாய்க்காலில் 300 கன அடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 200 கன அடியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 300 கன அடியும் விவசாய பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது.

அமராவதி ஆற்றில் இருந்து வரும் உபரி நீர் காவிரி ஆற்றில் கலப்பதாலும், தொடர்ந்து மழை செய்து வருவதால் மாயனூர் காவிரி கதவனுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

error: Content is protected !!