தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 990கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னை, கடலூர் , எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு வைக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி காலை மோந்தா புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை… 27ம் தேதி ”மோந்தா” புயல்
- by Authour

