Skip to content

ராமதாஸ் மகளுக்கு பாமகவில் முக்கிய பொறுப்பு

பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தலைமையில் கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக நடந்ததாக அன்புமணி மீது 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, இதுகுறித்து அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அன்புமணி பதிலளிக்காததால் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார்.
அவரை செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில் கட்சியின் புதிய செயல் தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தருமபுரியில் நடைபெற்று வரும் கூட்டத்தில் இதனை அறிவித்த ராமதாஸ், ‘காந்திமதி கட்சியையும் வளர்ப்பார், எனக்கும் பாதுகாப்பாக இருப்பார்’ என்று தெரிவித்தார்.

error: Content is protected !!