Skip to content

கரூர் அருகே சாலை விபத்து…கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி.. 6 பேர் காயம்

 

கரூரில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவை தனியார் கல்லூரியில் கம்யூட்டர் செயின்ஸ் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 8 பேர் இன்னோவா காரில் கோவையிலிருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். கோவை – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு முன்னூர் அருகே வந்து கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சார்ந்த பிரவீன் (வயது 19), வளையாபட்டியை சார்ந்த மாதேஷ் (வயது 19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் இவர்களுடன் பயணம் செய்த 6 மாணவர்கள் காயங்களுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக தென்னிலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!