தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பத்துக்காடு கரிசவயல் கடைத்தெரு பகுதியில் ஆட்டுமந்தை கூட்டம் போல் நாய்கள் அதிக அளவு கூட்டமாக சுற்றித் திரிவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்


கடைத்தெருவுக்கு பொருட்களை வாங்க செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனர் இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் நலன் கருதி உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

