Skip to content

கும்பகோணம்.. அரசு பஸ் படியிலிருந்து கீழே விழுந்து மாணவர் பலி

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே அரசு பஸ் படியில் தொங்கியவாறு மாணவர் பயணம் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவர் நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாணவர்கள் 2 பேர் கீழே விழுந்த நிலையில் கல்லூரியில் படிக்கும் இளம்பருதி என்பவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக மாணவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பஸ் படியில்  தொங்கியவாறு ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்வதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!