Skip to content

கோவையில் குட்டியுடன் உலாவரும் காட்டு யானை

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் உணவு தேடி உலா வந்து கொண்டு உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனிதர்களை அச்சுறுத்தி மூன்று பேரை கொன்ற ரோலக்ஸ் என்ற ஒற்றைக் காட்டி யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து இன்று காலை தொண்டாமுத்தூர் பகுதிகளில் ஒற்றைக் கொம்பன் ஆற்றில் இறங்கிச் சென்ற செல்போன் வீடியோ வைரலானது. அதேபோன்று தடாகம் சுற்று வட்டாரப் பகுதியில் தோட்டத்து வீட்டில் வைத்து இருந்த அரிசி மாவை தின்று பயிரிடப்பட்ட வாழைத், தென்னை மரங்களை சேதப்படுத்தி சென்றது வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானையின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று மாலை துடியலூர், அடுத்த பன்னிமடை அருகே உள்ள பொண்ணுது அம்மன் கோவில் அடிவாரத்தில் குட்டியுடன் தாய் யானை உலா வந்து கொண்டு உள்ள செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து, பொன்னுத்தம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்புடன் எச்சரிக்கையாக செல்லுமாறு சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். மேலும் வனத்துறையினர் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!