நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த ஆண்டு திருச்சி மாவட்டத்திலிருந்து சென்ற வழக்கறிஞர் வி.எல். சீனிவாசன் மற்றும் உறையூர் கலை ஆகிய இருவர் விபத்தில் உயிரிழந்தனர். அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி போஸ்டர் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது …
அதில் நடிகர் விஜய்க்கு பல கேள்விகளை கேட்டு அவர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்
வீர தேவேந்திர மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் …. தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் உயர்நீத்தோம் எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா
15 ஆண்டு காலமாக உங்கள் பின்னால் அணிவகுத்தோம் எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா
கட்சி மாநாட்டிலும் பொது கூட்டத்திலும் கூட எங்களுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லையே விஜய் அண்ணா
முதல் சுற்றுப்பயணம் திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தாயே விஜய் அண்ணா அப்போது எங்களுடைய உழைப்பில் முதல் வெற்றியைப் பெற்றீர்களே அப்போது கூட எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா
கரூர் துயர சம்பவத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தத்துப் பிள்ளையாக இருப்பேன் என்று உறுதி அளித்து உள்ளீர்களே விஜய் அண்ணா எங்கள் குடும்பம் எல்லாம் நடுரோட்டில் கிடப்பதா விஜய் அண்ணா
நீங்கள் மறந்தாலும் மேலும் மேலும் நீங்கள் உயர எங்களுடைய ஆத்மா வழி நடத்தும் விஜய் அண்ணா
என அந்த போஸ்டரில் வாசகம் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. இந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

