கரூரில் கடந்த 27 ஆம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் விஜய் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் வரவு வைத்தனர். கோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் அவர்கள் குடும்பத்திற்கு நடிகர் விஜய் 20 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். உயிரிழந்த குடும்பத்தினரும் விஜய் வீடியோ காலில் பேசும் பொழுது நேரில் உங்களை சந்திப்பேன் என்று கூறியிருந்த நிலையில், இன்று மாமல்லபுரம் தனியார் சொகுசு விடுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்.
கோடங்கிபட்டி சேர்ந்த ரமேஷ் அவர்களின் குடும்பத்தின் சார்பில் அவரது மனைவி செல்லவில்லை அதற்கு பதிலாக இறந்தவரின் அக்கா பூமதி, அவரது கணவர் அர்ஜுனன், உறவினர் பாலு ஆகியோர் சென்றனர்.
இந்நிலையில் ரமேஷ் அவர்களின் மனைவி சங்கவி அவர்களுக்கு தெரியாமல் சென்ற காரணத்தினாலும், விஜய் நேரில் வராத காரணத்தினால் நடிகர் விஜய் வங்கி கணக்கில் செலுத்திய 20 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பி உள்ளனர்.

