Skip to content

கோவை-சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பாறை மேடு பகுதியில் கடந்த 27ஆம் தேதி மூன்று ஆடுகளை அடித்துக் கொன்றது சிறுத்தை, இதை அடுத்து வனத்துறையினர் சிறுத்தை பிடிக்க இரண்டு தனியார் தோட்டங்கள் பகுதிகளில் கூண்டு வைத்துள்ளனர் மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கூறுகையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ளது இந்தப் பகுதியில் வளர்ப்பு கன்று குட்டி மற்றும் நாய்கள் பத்துக்கும் மேற்பட்டது சிறுத்தைக்கு பலியாக உள்ளது பெருமாள் கரடு பகுதியில் இருந்து வெளிவரும் சிறுத்தை தனியர் தோட்டங்கள் வழியாக மாலை 6 மணிக்கு மேல் இரவு நேரங்களில் உலா வருகிறது அதிகாலையில் பால் கறக்க செல்லும் பொழுது மூன்று சிறுத்தைகள் குட்டியுடன் சென்றுள்ளதும் தனியாக சிறுத்தை இருப்பதாக கூறுகின்றனர் விரைவில் சிறுத்தை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர், சிறுத்தை விட மட்டும் உள்ளதால் விவசாய தோட்டங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!