மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா போலீசில் கார் அளித்திருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு தங்களுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதனிடையே, ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தான் நிறைமாத கர்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை என்பதாலும், தற்போது தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்றும், கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 ரூபாய் பராமரிப்பு செலவு தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், விசாரணையில், ஜாய்கிரிசல்டாவை 2வது திருமணம் செய்து கொண்டது உண்மை தான் என ரங்கராஜ் ஒப்புக் கொண்டுள்ளார். இதனால், அவரது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் காவல்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. தான் குழந்தையின் தந்தை என ரங்கராஜ் ஒப்புக்கொண்டதால் டிஎன்ஏ ஆதாரங்கள் தேவையில்லை எனவும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

