தமிழ்நாடு மீனவர்களை படகுடன் திருப்பி அனுப்ப உத்தரவிட்ட இலங்கை கெய்ட்ஸ் நீதிமன்ற நீதியரசர் அவர்களுக்கும் அது சம்பந்தமாக உதவி புரிந்த இலங்கையின் அனைத்து நிலை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக மீனவ மக்கள் சார்பாக எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தஞ்சை, மல்லிப்பட்டினம், தமிழ்நாடு மீனவர் நல வாரியம்,
பொதுச் செயலாளர், தமிழ்நாடு மீனவர் பேரவை, உதவி தலைவர் தாஜூதீன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது..
கடந்த 16 10 2025 அன்று இலங்கை கடற்படையினரால் கைதான தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் AKT என்ற பெயர் கொண்ட பாய்ஸ் அக்ரம் அவர்களுக்கு சொந்தமான படகையும் மூன்று மீனவர்களுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களை இலங்கை கெய்ட்ஸ் நீதிமன்றத்தில் நீதி அரசர், அவர்களை 11 நாள் காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு அதன்படி 4.11.2025 நேற்று படகுடன் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளதற்கு எங்கள் தமிழ்நாட்டின் மீனவர்கள் சார்பாக நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதுடன் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து உதவி புரிந்த அனைத்து நிலை இலங்கை அதிகாரிகளுக்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மீன்பிடிப்பதற்காக தன்னுடைய வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிதற்காக கைது செய்து சிறையில் அடைத்தும் அவர்களுடைய வாழ்வாதாரமான படகுகளை சிறை பிடித்தும் வைத்துள்ளதை கருணை உள்ளத்துடன் இலங்கை அரசும்,கனம் நீதி அரசர்களும், மற்றும் உயர்நிலை அலுவலர்களும் இணைந்து செயல்பட்டு படகுகளையும் மீனவர்களையும் உடனடியாக விடிவிக்க வேண்டுமாய் மிகவும் பணிவன்புடன் தமிழக மீனவர்கள் சார்பாக,தெரிவித்துக் கொள்கிறேன் என்று இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

