Skip to content

திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

  • by Authour

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சிவ.சவுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!