கேஜிஎஃப் (KGF) திரைப்படத்தில் ஹரிஷ் ராய் நடித்த ஒரு முக்கிய வில்லன் பாத்திரத்தின் பெயர் சச்சா. இவர் கதையில் ராக்கி பாயின் (Yash நடித்த) நெருக்கமான நண்பர் மற்றும் முக்கிய சகோதரராக விளங்கினார்.
இவர் புற்றுநோயால் பாதிக்கபட்டிருந்தார், சமீபத்தில், கோபி கவுத்ரு, உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகரை சந்தித்து, ஹரிஷ் ராய் நிதி உதவி கேட்டு வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்த காணொளியை ஆன்லைனில் பகிர்ந்து கொண்டார். உடல்நிலை மேம்பட்டால் மீண்டும் நடிப்புக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்த அவர், தனது சிகிச்சைக்கான பெரும் செலவை வெளிப்படுத்தினார்.ஒரு ஊசிக்கு மட்டும் ₹3.55 லட்சம் செலவாகும் என்று ராய் கூறுகிறார். மருத்துவர்கள் 63 நாட்களுக்கு ஒரு சுழற்சிக்கு மூன்று ஊசிகள் என பரிந்துரைத்துள்ளனர், அதாவது ஒவ்வொரு சுழற்சிக்கும் ₹10.5 லட்சம். பல சந்தர்ப்பங்களில், நோயாளிகளுக்கு 17 முதல் 20 ஊசிகள் தேவைப்படுகின்றன, அதாவது அவரது ஒட்டுமொத்த சிகிச்சைக்கு சுமார் ₹70 லட்சம் செலவாகும். இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள கித்வாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (நவ.06) உயிரிழந்தார்.

