திருச்சி மாநகராட்சி 55 – வது வார்டு பிராட்டியூர் கணபதி நகர், முருகன் நகர் நலச்சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம். நாச்சிக்குறிச்சி ஊராட்சியில் மத்திய அரசின் “ஜல் ஜீவன்” திட்டத்தின் கீழ் முருகன் நகர் விஸ்தரிப்பு பகுதி, ஆரோவில் நகர், பூண்டிமாதா நகர், வலம்புரி நகர் பகுதிகளைச்-சார்ந்த இணைப்பில் கண்ட வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் 06/2024-ல் பதிக்கப்-பட்டது. ஆனால் இதுநாள்வரை வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும் சில வீடுகளில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் நாச்சிக்குறிச்சி ஊராட்சியால் பிரித்து எடுத்து செல்லப்பட்டு விட்டது. அதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சில வீடுகளுக்கு குடிநீர் குழாய் பதிக்கப்படவே இல்லை. சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு ரசீது வழங்கியும், குடிநீர் இணைப்பு இதுவரை வழங்காமலும், குடிநீரக்குழாய் பதிக்கப்படாமலும் உள்ளது.
இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்புச்சுவையாக உள்ளதால், மக்கள் குடிநீருக்காக தவிக்கின்றனர்.
எனவே, மாவட்ட கலெக்டர் இப்பகுதிவாழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்கிட ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இத்துடன் குடிநீர் குழாய் இணைப்பு பதிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படாத வீடுகளின் பட்டியல், குடிநீர்க் குழாய் பதிக்கப்பட்டு பிரித்து எடுத்துச்செல்லப்பட்ட வீடுகளின் விவரங்கள், குடிநீர்க்குழாய் பதிக்கப்படவேண்டிய வீடுகளின் விவரங்கள் மற்றும் பணம் பெற்றுக்கொண்டு ரசீது வழங்கியும், குடிநீர் இணைப்பு இதுவரை வழங்காமலும், குடிநீர்க்குழாய் பதிக்கப்படாமலும் உள்ளது .எனவே உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்தக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

