தமிழர் முன்னேற்றக் படை தலைவர் வீரலட்சுமி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் , பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் மீது பத்தாவது முறையாக புகார் கொடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, “பாஜக மாநில மகளிர் அணி பொருளாளராக உள்ள மாலினி ஜெயச்சந்திரன் பாஜக கட்சி நிர்வாகிகளின் 5000 கோடி கருப்பு பணத்தை வைத்துள்ளார். இந்த பணத்தைக் கொண்டு திருநின்றவூர், வேப்பம்பட்டு உள்ளிட்ட ஊர்களில் நிலங்கள், கட்டிடங்களை வாங்கி வைத்துள்ளார். அண்ணாமலை, வானதி சீனிவாசன், நிர்மலா சீதாராமன் ஆகியோரும் கருப்பு பணத்தை மாலினி ஜெயச்சந்திரனிடம் கொடுத்து பதுக்கி வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.இது தொடர்பாக ஏற்கனவே 9 முறை புகார் அளித்துள்ளேன். தற்போது பத்தாவது முறையாக புகார் அளித்துவிட்டு வந்திருக்கிறேன். எனது புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டபோது மழுப்பலான பதிலையே வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலக வாசலில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும்” என்றார்.

