கரூர் திருவள்ளுவர் மைதானத்தில்
CII மற்றும்
யங் இந்தியன்ஸ் தனியார் கூட்டமைப்பு சார்பில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கியது.
இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர்

தங்கவேல் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
இந்த மாரத்தானின் 5 மற்றும் 10 கிலோ மீட்டர் போட்டியும், வாக்கத்தான் போட்டியில் 3 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.
வாக்கத்தான் போட்டியில் சட்டமன்ற

உறுப்பினர் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டனர்.
பின்னர் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகளை செந்தில் பாலாஜி வழங்கினார்.

