திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஒன்றியம்கொடுமாம்பள்ளி பகுதியில் மின் கசிவின் காரணமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடும்பம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் கொடும்பள்ளி பகுதியில் வசித்து வரும் சிவகாமி கணவர் அன்பு (35) என்பவர் திருப்பத்தூரில் பிரபலமான கிருஷ்ணா சில்க்ஸ் துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளார் இவரது வீட்டில் திடீரென சத்தம் கேட்டு வீட்டில் அருகில் இருக்கும் மோகன் சென்று பார்த்தபோது திடீரென மின் கசியின் காரணமாக தகர சீட் வீடு தீப்பற்றி எரிந்தது.
அந்த வீட்டில் இருந்த சிலிண்டர் மற்றும் பிரிட்ஜ் ஆகியவற்றின் காரணமாக தீ வேகமாக பரவியது. இதற்கிடையில் கேஸ் சிலிண்டர் வெளியேறும் சத்தம் கேட்டதும், அப்பகுதி மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
மேலும் வீட்டினுள் இருந்த அனைத்து பொருள்களும் தீயினால் கருகி அனைத்தும் சேதம் அணிந்து காணப்பட்டது
பின்பு தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். பின்னர்

எரிந்து கொண்டிருந்த தகர சீட்டுகளையும் அகற்றி, தீ முழுவதையும் அணைத்தனர்.
வீடு முழுவதும் எரிந்து நாசமான நிலையில், வீட்டின் உரிமையாளர் சிவகாமி தனக்கு குழந்தை இல்லை என ஒரு பையனை தத்தெடுத்து பிளஸ் டூ வரை படிக்க வைத்து வளர்த்து வந்த நிலையில் “என் பிள்ளை எப்படி படிக்கப் போகிறான் என தெரியவில்லை” எனக் கூறி கதறி அழுது வருத்தமடைந்தார்
திடீர் மின் கசிவினால் தகரச் வீடு தீ பிடித்ததில் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

