தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பேருந்து டிராக்டர் டிப்பரின் சக்கரத்தில் மோதி அதே நேரத்தில் ஆடுதுறை நோக்கி வந்த அரசு நகர பேருந்திலும் மோதி கண்ணாடிகள் நொறுங்கியது. இதில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 11 பயணிகள் பல்வேறு இடங்களில் காயம் பட்டு ரத்த காயங்களுடன் திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி

வைக்கப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்து திருவிடைமருதூர் போலீசார் விபத்து நடந்த பேருந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதற்கு பிரேக் போட்டால் சாலை வலுக்கி கொண்டு செல்வதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். இதே இடத்தில் இரண்டு மாதங்கள் முன்பு அரசு பஸ் மரத்தில் போதி 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

