Skip to content

மூதாட்டி வீட்டில் கொள்ளை- டூவீலர் திருட்டு… திருச்சி க்ரைம்

  • by Authour

மூதாட்டி வீட்டில் கொள்ளை

திருச்சி ஏர்போர்ட்டில் மூதாட்டி வீட்டில் 13 கிராம் தங்க நகைகள் மற்றும் 50 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்புஜம்67. கடந்த பத்தாம் தேதி தன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார் மீண்டும் மறுநாள் நவம்பர் 11ம் தேதி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கம்பி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே உள்ள கதவின் கூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 13 கிராம் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளி பூஜை சாமான்கள் மற்றும் இரண்டு கைக்கடிகாரங்கள் திருடு போனது தெரியவந்தது இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டூவீலர் திருட்டு
திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முகமது மொய்தீன் 34. கடந்த ஆறாம் தேதி காந்தி மார்க்கெட் நெல்பேட்டை லஸ்கர் தெரு அருகே தன் டூவீலரை நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் நவம்பர் 7ஆம் தேதி வந்து பார்த்தபோது டூவீலர் திருடு போனது
தெரியவந்தது இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அயன் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி ஏர்போர்ட் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 47) துணிகளுக்கு அயன் ஓடும் வேலை செய்து வருகிறார். மேலும் இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்.
இந்நிலையில் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வருமாம். நேற்று துணிகளுக்கு அயன் போட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் விரக்தியில் வீட்டில் மின்விசிறி கொக்கியில் தூக்க மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்க்க அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஏர்போர்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து ஏர்போர்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய சேகர் உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

காவலாளி மயங்கி விழுந்து சாவு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி அருகே உள்ள
பழுவருத்தி கிராமத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் சிவபெருமாள் (49)இவர் தனரத்தனம் நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்,இந்நிலையில் நேற்று பணியில் இருந்தபோது திடீரென்று சிவபெருமாள் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் சிவபெருமாள் இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மூச்சு திணறி பெண் சாவு

திருச்சிமாவட்டம் லால்குடி அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் ஜான்சன் இவரது மனைவி ஜெயராணி.இவர் பிரசவத்துக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.அதன் பிறகு அவரது வயிற்றில் கட்டி இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்து அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.இதை யடுத்து ஜெயராணியை அந்த ஆஸ்பத்திரியில் இருந்து மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் நேற்று ஜெயராணி அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!