தஞ்சை மாரியம்மன்கோவில் ஜெயஸ்ரீ நகரை சேர்ந்தவர் மு.முகமது அலி ஜின்னா (49). இவர் நேற்று வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடி பார்த்தும் பைக் கிடைக்கவில்லை. இதுகுறித்து முகமது அலி ஜின்னா தாலுகா போலீசில் புகார் செய்தார்.
இதேபோல் தஞ்சை மானோஜிப்பட்டி சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சுசீதரன். இவரது மனைவி ராதிகா (41). இவர் கடந்த அக்.30ம் தேதி தனது ஸ்கூட்டியை மருத்துவகல்லூரி சாலை ஈஸ்வரி-இந்திரா நகர் சந்திப்பில் நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டியை காணவில்லை.
இதுகுறித்து ராதிகா மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்திருந்தார். இது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்ொண்டனர். இதில் பைக் மற்றும் ஸ்கூட்டியை திருடியது தஞ்சை அம்மாக்குளத்தை சேர்ந்த கிசாந்த் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து கிசாந்தை போலீசார் கைது செய்தனர்.

