கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்புச்சி புதூரில் கடந்த 27 -ம் தேதி விரைவில் தனியார் தோட்டத்தில் உள்ள புகுந்த சிறுத்தை கிடா ஆடு மட்டும் கன்று குட்டியை அடித்துக் கொன்றது மாலை நேரங்களில் விவசாயத் தோட்டத்தில் தென்பட்டதால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர் இதை அடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பெயரில் பொள்ளாச்சி வனசரகர் ஞானபால முருகன் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாடும்

வழித்தடத்தில் கூண்டு வைத்து ஆடு மற்றும் நாய் வைக்கப்பட்டு கண்கடைத்து வந்தனர் சிறுத்தை வலிமாறி சென்றதால் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள காளியப்பன் தோட்ட பகுதியில் கூண்டும் அம்மன் கோவில் நெல்லிக்காய் தோப்பு பகுதியில் ஒரு கூட்டம் மாற்றி வைக்கப்பட்டது சிறுத்தை எளிதாக மாட்டிக் கொள்ள மீன்கள் வைக்கப்பட்டது ஆனால் நேற்று நடு இரவு வனப்பகுதி விட்டு வெளியேறிய சிறுத்தை கூண்டு வைக்கப்பட்ட பகுதிக்கு வராமல் அருகில் இருக்கும் சுமதி என்பவர் தோட்டத்தில் வளர்த்து வரும் கன்று குட்டியை அடித்துக் கொன்றது இதனால் அப்பகுதி விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மாடு மற்றும் ஆடு தங்களுக்கும் பாதுகாப்பு இல்லை அச்சமாக உள்ளது என தெரிவித்தனர் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் கால் தடைகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

