Skip to content

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 13, 2025) காலை வெளியிட்ட எச்சரிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை தொடரும் என்று தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.தென் தமிழக மாவட்டங்களான ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடியில் கடலோரப் பகுதிகளில் மிதமான மழை தொடரும் என்றும், மாலைக்கு மேல் மழையின் தீவிரம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் சாலைகளில் தேங்கும் மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஏற்கனவே, 17-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

18-11-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!