பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம் என த.வெ.க அருண்ராஜ் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று (நவ., 12) தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், கூட்டணி குறித்த முடிவை தலைவர் விஜய் எடுப்பார் என்றும் அவரது சுற்றுப்பயண அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மக்களுடன் இருக்க வேண்டும் என்ற மன உறுதி விஜய்க்கு அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.

