தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் கடந்த அக். 14 முதல் அக்.17ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இதில் தனியார் பல்கலைகள், சித்த மருத்துவ பல்கலை. உருவாக்கும் சட்டம் உட்பட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் 9 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் இதுவரை ஒப்புதல் அளித்து இருந்தார்.
இந்த நிலையில், தமிழக அரசின் மேலும் 3 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, உள்ளாட்சி அமைப்பு சிறப்பு அதிகாரிகளில் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா, தமிழ்நாடு ஊராட்சிகள் ஐந்தாம் திருத்தச் சட்டமசோதா, தமிழ்நாடு தொழிற்கல்வி நிலையங்களில் சேர்க்கை திருத்தச் சட்ட மசோதா ஆகியவைகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

