வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி..ரவுடி உட்பட 2 பேர் கைது
திருச்சி செந்தண்ணீர்புரம்ம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் சரசு (67 )இவர் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டினுள் புகுந்து அவரை தாக்கி அவரது கழுத்தில் இருந்த செயினை பறித்துச் செல்ல முயன்றனர்.அப்போது அவர் கூச்சலிட்டார். ஊதாட்டியின் சத்தம் கேட்டவுடன்அக்கம் பக்கத்தினர் வர தொடங்கியவுடன்,கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து சங்கிலியாண்டபுரம் பாரதிநகரை சேர்ந்த குண்டுமணி (30) என்கிற சரித்திர பதிவேடு ரவுடி மற்றும் கொசு கார்த்திக் ( 35 ) ஆகிய இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியரிடம் லேப்டாப் திருட்டு
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர் ராஜா (39) . இவர் சம்பவத்தன்று, திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு காந்தி மார்க்கெட் பால்பண்ணை அருகே பஸ் ஏறினார். பஸ் பால்பண்ணையை கடந்து சிறிது தூரம் சென்றபோது மர்ம நபர் ஒருவர் அவரிடம் இருந்த லேப்டாப்பை பறித்து சென்றார். இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (27) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .தப்பி ஓடிய அதே பகுதியைச் சேர்ந்த வெட்டு வெங்கடேஷ் ( 34 ) என்பவரை தேடி வருகின்றனர்.
பெண் பாதுகாவலர் செல்போன் திருடிய வாலிபர் கைது
திருச்சி ஸ்ரீரங்கம் நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரி ( 46 ) திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாவலராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சாந்தகுமாரி அரசு ஆஸ்பத்திரி புது கட்டிடம் அருகே ரோந்து சென்றார். அப்போது அங்கிருந்த அவரது கைப்பையில் இருந்த செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடி செல்ல முயன்றார். அப்போது அவரை சாந்தகுமாரி கையும் களவுமாக பிடித்து அரசு மருத்துவமனை போலீசாரிடம் ஒப்படைத்தார்.போலீசாரின் விசாரணையில் அவர் குழுமணி மேல தெருவை சேர்ந்த செந்தூர் முருகன் ( 31 ) என்பது தெரிந்தது .அவரை கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின் சிறையில் அடைத்தனர்.
மனைவி பிரிந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை..
திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (32). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் .குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மனைவி அவரை பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலில் தினமும் மது குடித்து வந்தார்.இந்நிலையில் மதன் குமார் நேற்று தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து,உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

