சென்னை கலைவாணர் அரங்கத்தில் தூய்மை பணியாளர்களின் மேம்பாட்டு திட்டம் மற்றும் இலவச உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் சென்னையில் நலத்திட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது..
தூய்மைப்பணியாளர்களுக்கு வெப்ப காப்பு பையில் கொண்டு செல்லப்பட்டு உணவு வழங்கப்படும்.தூய்மை பணியாளர்களின் வாழ்க்கைதரம், சுயமரியாதை உயர வேண்டும். சுவையும், ஈரோக்கியம் நிறைந்த உணவு வழங்கப்படும்.தூய்மை பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைககளும் நிறைவேற்றப்படும். பாதுகாப்பு உணகரணங்கள் வழங்குதல், சுகாதார காப்பீடு உள்ளிட்டவற்றை தடையின்றி பெற வழிவகை செய்யபடும்.
உணவுதிட்டம். டிசம்பர் 6 முதல் அனைத்து நகர பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். சென்னையில 200 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறைகள் அமைக்கப்படும். பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது. என இவ்வாறு தெரிவித்தார்.

