அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை தனது சாட்டை வலைதளத்தில் அருவருக்கத்தக்க வகையில் பேசிவரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை கண்டித்தும், அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் திருச்சி,

சண்முகாநகரில் உள்ள அவரது வீட்டை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர் கையில் விளக்குமாறுடன் முற்றுகையிட்டு தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாட்டை துரைமுருகனை காவல்துறையினர் பத்திரமாக வீட்டில் இருந்து காரில் ஏற்றி அனுப்பி

வைத்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அமமுகவினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால், தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பெரும் பரபரப்புடன் காணப்பட்டது

