ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சடலமாக கிடந்த முதியவர்
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் இந்தியன் வங்கி அருகாமையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார் ?எந்த ஊரைச் சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை. இது பற்றி கோ அபிஷேகபுரம் மேற்கு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மென்ட் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவர் பச்சை கருப்பு கலந்த கோடு போட்ட கைலி மற்றும் பச்சை துண்டு அணிந்திருந்தார் முன்னங்கையில் காயத் தழும்பு உள்ளது. அடையாளம் தெரிந்தால் காவல்துறையை அணுக கேட்டுக் கொண்டுள்ளனர்.
புகையிலை விற்ற 3 பேர் கைது
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பெரம்பலூர் பஸ் நிலையம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக கோட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது போலீசார் அங்கு சோதனை நடத்தி புகையிலை விற்ற கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த பாலு 52 என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 2,120 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பால் பண்ணை அருகே புகையிலை விற்ற புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த ராஜு 30 என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்து பின்னர் பெயிலில் வெளியே விட்டனர்.அவரிடமிருந்து 50 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது மற்றொரு சம்பவத்தில் சங்கியாண்ட புரம் அருகே புகையிலை விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ஷேக் முஸ்தபா 39 என்ற வாலிபரை பாலக்கரை போலீசார் கைது செய்து பெய்லில் வெளியே விட்டனர் அவரிடம் இருந்து 80 கிராம் கொஞ்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

