பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 2 நிமிடங்களில் அனைத்து ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. முக்கியமாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முயற்சி செய்தவர்களுக்கும், காலை 5 மணி முதலே கவுன்டரில் காத்திருந்த பயணிகள் பலருக்கும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

