Skip to content

கரூரில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

  • by Authour

கார்த்திகை முதல் நாளான இன்று கரூரில் புகழ்பெற்ற ஐயப்பன் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தை மேற்கொண்டனர்.*

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் பல்வேறு ஐயப்பன் ஆலயங்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து 48 நாள் 1 மண்டலம் அல்லது 24 நாள் 1/2 மண்டலம் அல்லது 12 நாட்கள் 1/4 மண்டலம் என தங்களது விரதத்தை மேற்கொண்டு அதன் தொடர்ச்சியாக இருமுடி கட்டி கேரளாவில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று தங்களது நேர்த்தி கடனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கார்த்திகை ஒன்றாம் தேதியான இன்று கரூர் நகரப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற பசுபதீஸ்வரர் ஆலயம் அருகே உள்ள ஐயப்பன் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் குளித்து நீராடி ஆலயத்தில் உள்ள குருசாமியிடம் மாலை அணிவித்து வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து ஆலயத்தில் வீற்றிருக்கும் மஞ்சள் மாதா, ஐயப்பன், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மனமுருகி வழிபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!