Skip to content

கோவை-சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..அதிக சத்தத்துடன் வந்த வாகனம் பறிமுதல்

கோவை விழாவில் இன்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்க இருசக்கர வாகனத்தின் சைலன்சர்களை அல்டர் செய்து அதிக சத்தத்துடன் வந்த வாகனங்களை மேடையில் இருந்த படியே பறிமுதல் செய்ய போக்குவரத்து காவல் துணை ஆணையர் அசோக்குமார் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவையில் யங் இந்தியன்ஸ் அமைப்பின் சார்பில் ஆண்டு தோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 18வது ஆண்டு கோவை விழா தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் , நகரின் பல்வேறு பகுதிகளில் தினம் ஒரு நிகழ்ச்சி என நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆயிரம் இருசக்கர வாகனங்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன பேரணி இன்று நடத்தப்பட்டது. இந்த பேரணியை கோவை மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையர் அசோக்குமார் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த அவர் சாலை பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசி வந்தார். இரு சக்கர வேகமாக வாகனம் ஓட்டுவதுதான் வாகன விபத்தில் 70 சதவீத இறப்புக்கு காரணமாக அமைகிறது எனவும்,10 முதல் 20 சதவீதம் மது போதையில் வாகனம் இயக்குவது, மற்றவை விதிமுறைகளை பின்பற்றாமல் போன்றவற்றால் ஏற்படுகிறது எனவும் தெரிவித்தார். அவர் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே அதிக சத்தத்துடன்

இரு சக்கர வாகனம் சென்றது. அதிக சத்ததுடன் சாலையில் இரு சக்கர வாகனம் செல்லும் போது, சாலையில் பயணிக்கும் வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு அதிர்ச்சி ஏற்படும் எனவும், சைலென்சர் ஆல்டர் செய்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

துணை ஆணையர் பேசிக்கொண்டு இருந்த போதே , அதிக சத்தத்துடன் அந்த வாகனங்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தது. உடனடியாக அந்த வாகனங்களை பறிமுதல் செய்யும் படி மேடையில் இருந்தபடியே கோவை மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையர் அசோக்குமார் உத்தரவிட்டார்.

இது போன்ற வாகனங்கள் பேரணியில் இருந்தால் உடனடியாக வெளியே சென்று விட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இதனையடுத்து சைலென்சர் ஆல்டர் செய்யப்பட்டு வந்த 20 க்கும் மேற்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களை எச்சரித்த காவல் துறையினர், ஆல்ட்டர் செய்யபட்ட வாகனங்களை வெளியேற அறிவுறுத்தினர். அதிக சப்தத்துடன் வந்த ஒரு வாகனம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!