இந்திய தேசிய லீக் கட்சியின் ஐந்து மாவட்ட நிர்வாகிகள் பதவி நியமன விழா மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அந்தஸகட்சியின் தலைவர் பஷீர் அகமது தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பஷீர் அகமது…. இந்திய தேசிய லீக் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து மக்களும் தற்போது எதிர்கொண்டுள்ள எஸ் ஐ ஆர் வாக்களிக்க கூடிய பதிவு மட்டுமல்ல இது குடியுரிமையை பதிவு செய்து கொள்ளக்கூடிய வாக்குரிமை ஆகும். மக்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் அனைத்து சமுதாய மக்களும் ஒருங்கிணைந்து தங்களுடைய உரிமையை, குடியுரிமையை பதிவு செய்து கொள்வதற்கு கிடைத்திருக்க கூடிய வாய்ப்பை விட்டு விடாமல், அசாம் ஒடிசாவில் நடந்தது போல் நடந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.
இந்திய தேசிய லீக் கட்சி என்பது நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் சீட்டை வாங்குவது எங்களுடைய நோக்கமல்ல… இஸ்லாமிய மக்களுக்கு அரசியல் அதிகாரம், அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை , பள்ளிக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவசமாக கல்விச் சாலைகளை அரசே நடத்தப்பட வேண்டும். இஸ்லாமிய மக்கள் மட்டுமே எந்த துறையிலும் முழுமையாக அங்கீகாரம் கிடைக்காமல் உள்ளனர். குறிப்பாக நீதித்துறை, வருவாய்த்துறை, மருத்துவத் துறை என எந்த துறையிலும் பின் தங்கியே உள்ளனர். இஸ்லாமியர்களுக்கு முறையான இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கும் கட்சிகளுக்கே எங்களது ஆதரவு என்றார்.

