கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் உணவகம் சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைகவசம் அணிவதன் அவசியம் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் , பொள்ளாச்சி நியூஸ்கிம் ரோட்டில் குழந்தைகள் மலர் கொத்துக்களுடன், கையில் பதாகையில் உங்கள் எதிர்காலம் நாங்கள் தான் அத

னை உருவாக்குபவர்கள் நீங்கள் தான், பெற்றோர நீங்கள் தான் எங்கள் வழிகாட்டிகள் என பதாகைகள் ஏந்திய படி குழந்தைகள் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மலர் கொத்துக்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் செல்வோர் அனைவரும்

தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதனை குழந்தைகள் பெற்றோருக்கு எடுத்துரைக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார் தலைக்கவசம் அணிந்து வந்தவர்கள் மகிழ்ச்சியுடன் குழந்தைகளிடம் பூகோத்துக்களை பெற்றுக் கொண்டதும் அணியாதவர்கள் ஏக்கத்துடன் சென்றதாகவும் தெரிவித்தார்.

