Skip to content

சென்னையில் ரூ.261 கோடியில் விளையாட்டு நகரம்- அரசாணை வெளியீடு

  • by Authour

சென்னைக்கு அருகில் 261 கோடியில் விளையாட்டு நகரம் அமைக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னைக்கு அருகே உலகத் தரத்திலான ‘சர்வதேச விளையாட்டு நகரம்’ அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதனை செயல்படுத்தும் வகையில் சென்னை செம்மஞ்சேரியில் 112 ஏக்கர் பரப்பளவு நிலம் அடையாளம் காணப்பட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 261 கோடியில் விளையாட்டு நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. மேலும் முதல் கட்டமாக 30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த விளையாட்டு நகரத்தில், நீர் விளையாட்டுகள், துப்பாக்கி சுடுதல், ஸ்கேட்டிங், வில்வித்தை, கால்பந்து மைதானம், நவீன செய்றகை இழை ஓடுதளம், பல்வேறு உள்அரங்க விளையாட்டுகளை நடத்தும் வகையில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது. முதல் கட்டமாக நீர் விளையாட்டுகள், நீர் விளையாட்டுகள், துப்பாக்கி சுடுதல், ஸ்கேட்டிங், வில்வித்தை மற்றும் பல்நோக்கு விளையாட்டு அரங்கல் அமைக்கப்பட உள்ளது. இரண்டாவது கட்டமாக உள் விளையாட்டு அரங்கம் மற்றும் வெளி விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

error: Content is protected !!