கோவை, பொள்ளாச்சி லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் இன்று வட்டார போக்குவரத்து துறை சார்பில் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செழியன் பங்கேற்று, பேருந்து ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது பயணிகளிடம் இருந்து வரும் குறைகளை கருத்தில் கொண்டு,குறைகளை களைய வேண்டும்,பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்,பேருந்தில் ஒலிபெருக்கி மூலம் அதிக சப்தத்துடன் பாடல்களை இயக்கக் கூடாது ,சாலைகளில் விபத்துக்கள் நிகழாமல் பேருந்துகளை கவனமாக கையாள வேண்டும் உள்ளிட்ட பல அறிவுரைகளை நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு தெரிவித்தார். இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொள்ளாச்சி மற்றும் கோவை சுற்றுவட்டார பகுதி பேருந்து ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.
பயணிகளிடம் கனிவாக நடந்துகொள்ள பஸ் ஊழியர்களுக்கு RTO அறிவுரை
- by Authour

