Skip to content

திருப்பத்தூர்-சட்டவிரோதமாக மண் விற்பனை… பல கோடி மோசடி- மனு

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காங்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (47) பிஜேபியில் மாவட்ட பிரச்சார பிரிவு இணை அமைப்பாளராக உள்ளார்.

இவர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்ப கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ரிங் ரோடு பணிக்காக அரசு வழங்கிய மண் அள்ளுவதற்கான பர்மீட்டை தவறாக பயன்படுத்தி திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்

நாளொன்றுக்கு சுமார் 1000 முதல் 1500 வரை போலி பர்மிட் ஆக தயார் செய்து ஒரு லோடை சுமார் 3,500 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் ரிங் ரோடு அமைக்க கான்ட்ராக்ட் எடுத்துள்ள ஸ்ரீதர் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் தனி நபர்கள் ஆதாயத்திற்காக அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்ப்படுத்தி வருகின்றனர்.

எனவே இந்த பர்மீட்டை ரத்து செய்து அவர்களுக்கு உடந்தையாக உள்ள அரசு அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதேபோல அவர்களால் சுரண்டப்பட்ட பணத்தை கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் மேலும் அந்த இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

error: Content is protected !!