திருப்பத்தூர் மாவட்டம் பெரியமூக்கனூர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தினகரன் (51) இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரிடம் 51 சென்ட் அளவிலான நிலத்தை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் அண்ணாதுரையின் மச்சான் ஆன உதயகுமார் (35) என்பவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது.
மேலும் உதயகுமார் தன்னுடைய அம்மாவிற்கு சேர வேண்டிய சொத்து எனக் கூறிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அதேபோல முறையான பத்திரம் பதிவு செய்துள்ளதால் தினகரனும் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்து உள்ளார் இந்த நில பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ள நிலையில்
நேற்று இரவு உதயகுமார் அத்துமீறி தினகரன் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைமரம், கொய்யா செடி, எலுமிச்சை செடி, உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட செடிகளை வெட்டி வீசி சென்று உள்ளார்.
இதனை அறிந்த தினகரனின் தாயாரான ருக்மணி காலங்காலமாக பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தண்ணீர் ஊற்றி புள்ளை போல வளர்த்த செடிகளை வெட்டிட்டானே? அவ நல்லா இருப்பானா? என கதறி அழுத்த சம்பவம் காண்போர் நெஞ்சை கண்கலங்க செய்தது. மேலும் இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செடிகளை வெட்டிய உதயகுமார் மீது தினகரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்..

