குளித்தலையில் புகையிலை தடுப்பு மற்றும் தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு பேரணி
கரூர் மாவட்டம் குளித்தலையில் லயன்ஸ் கிளப் சார்பில் புகையிலை மற்றும் மது அருந்துவதை தடுப்பதற்காகவும் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி குளித்தலை காந்தி சிலை முன்பு நடைபெற்றது. பேரணியானது பேருந்து நிலையம், நீதிமன்றம் வழியாக சுங்க கேட் வரை சென்று முடிவடைந்தது.
இந்தப் பேரணியில் தனியார் பள்ளி பள்ளி மாணவ மாணவியர்கள் தலைக்கவசம் உயிர்க்கவசம்,

போதையின் பாதை சாவின் பாதை என்ற பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.
இந்நிகழ்வில் குளித்தலை காவல் ஆய்வாளர் கருணாகரன், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் கிராமியம் நாராயணன், வளையப்பட்டி அசோக், வழக்கறிஞர் சக்திவேல், தனியார் பள்ளி தாளாளர் ரம்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

