அரியலூர் மாவட்டம், வெங்கனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் பழனிச்சாமி (37). இவர் ஒரு வேலை விஷயமாக திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார் .அங்கு பஸ் நிலையம் அருகில் நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் வந்து பணத்தை பறித்து எஸ்கேப் ஆகிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக சிந்தாமணியை சேர்ந்த குரு ( 20), மேல தேவதானம் பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் (21) ஆகிய 2 வாலிபர்களை கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நடந்து சென்ற வாலிபரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது
- by Authour

