Skip to content

கீழ் சித்திரைசாவடி அணைக்கட்டை சீரமைக்கும் பணி- கோவை கலெக்டர் துவங்கி வைத்தார்

  • by Authour

கோவை சிறுதுளி அமைப்பானது 2003ம் ஆண்டு துவங்கப்பட்டு, நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவுமேலாண்மை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்று சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகளை கோயம்புத்தூர் மற்றும் மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது.

இன்று சிறுதுளி அமைப்பானது கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை மற்றும் கரூர் வைஸ்யா வங்கியுடன் இணைந்து கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள

நொய்யல் ஆற்றின் முக்கிய அணைக்கட்டுகளான “புதுக்காடு மற்றும் கிழ்ச்சித்திரைச்சாவடி (குனியமுத்தூர்) அணைக்கட்டுகளை தூர்வாரி புனரமைக்கும் திட்டத்தை தொடங்கி பல உள்ளன

இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு திட்டத்தை துவங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக கரூர் வைஸ்யா வங்கியின் சி.எஸ்.ஆர் தலைமை அலுவலர் நதியா மாலி, சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் மற்றும் நீர்வளத்துறையின் உதவிப்பொறியாளர் நல்லத்தம்பி மற்றும் தமிழ் நாடு விவசாய சங்க தலைவர்கள் சு.பழனிச்சாமி மற்றும் ஆறுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

இந்த புனரமைப்பு பணியானது, “நிலத்தடி நீர் வளம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும்.
இத்திட்டத்தின் மூலம் 65 மில்லியன் லிட்டர் (6.5 கோடி லிட்டர்) சேமிப்பு திறனை உயர்த்த முடியும்
அணைக்கட்டு அருகிலுள்ள விவசாயிகளின் விவசாய உற்பத்தித் திறன் உயர்வு காணும்.
சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு விரிவடையும் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!