Skip to content

போதை பொருளுடன் சிக்கிய அதிமுக தேர்தல் பணி நிறுவன ஊழியர்

  • by Authour

கடந்த 19-11 -25 அன்று சென்னை காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அண்ணா நகரை சேர்ந்த தியானேஸ்வரன் என்பவரை பிடித்து அவரிடம் இருந்து எல் எஸ் டி ஸ்டாம்ப் போதைப்பொருள் கைப்பற்றி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் கொடுத்த வாக்குமூலத்தின் படி, போதை பொருள் வைத்திருந்த சரத், சீனிவாசன் மற்றும் சர்புதீன் ஆகியோர் பிடித்து அவர்களிடம் இருந்து உயர்ரக கஞ்சா மற்றும் போதைப்பொருள் பறிமுதல் செய்துள்ளனர். இதில் பிடிக்கப்பட்ட சர்புதீன் என்பவர் அதிமுக வியூக வகுப்பு நிறுவனமான PSybe labs private limitedல் பணியாற்றி வருகிறார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அதே நிறுவனத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத், சாய் ஆகியோரையும் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!