Skip to content

மும்பை விமான நிலையம்…ரூ. 53 கோடி மதிப்புள்ள தங்கம், போதைபொருள் பறிமுதல்…20 பேர் கைது

  • by Authour

மராட்டிய மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள், தங்கம் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மும்பை விமான நிலையத்தில் கடந்த 7 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம், வைரம், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம், போதைப்பொருளின் மொத்த மதிப்பு ரூ.53 கோடி ஆகும். இந்த கடத்தலில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!