Skip to content

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முக்கிய மாற்றம்

சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் முதல் பொதுத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். இந்தத் தேர்வு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்படும். இரண்டாவது பொதுத் தேர்வு விருப்பத் தேர்வாக எழுதலாம் எனவும், இந்தத் தேர்வு மே மாதத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது குறித்து சி.பி.எஸ்.இ. தலைவர் ராகுல் சிங் விரிவான விளக்கம் கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், முதல் தேர்வில் அனைத்து பாடங்களுக்கும் நடக்கும். இந்த முதல் தேர்வை அனைவரும் கட்டாயம் எழுத வேண்டும். இரண்டாவது தேர்வு விருப்பப்படுவோர் எழுதலாம்.

இரண்டாவது தேர்வு, தங்களின் மதிப்பெண்களை அதிகரிக்க விரும்புவோருக்கான தேர்வாக நடத்தப்படும். அதாவது தொழில்முறை படிப்புகளில் சேர விரும்புவோருக்கு, அதிக மதிப்பெண்கள் தேவைப்படும் என்பதால், இத்தேர்வு நடத்தப்படுகிறது.இரண்டாம் முறை தேர்வு எழுதுவோருக்கு, அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்கள் முதன்மையாகவும், மொழிப்பாடங்கள் விருப்பத் தேர்வாகவும் இருக்கும்.

இந்தத் தேர்வில் ஒருவர் மூன்று பாடங்களை மட்டுமே எழுத முடியும். இந்தத் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!