ஸ்ரீரங்கம், காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் லெட்சுமி நரசிம்மர் சன்னதியில் 24ம் ஆண்டு சகஸ்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளை 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் 24வது பீடம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமி மங்களா சாசனத்துடன் சுவாமி முன்னிலையில் தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு குத்து விளக்கேற்றி சர ஸ்ர தீப நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். முன்னதாக
நாளை காலை நாதஸ்வர இன்னிசை கச்சேரியும் மாலை விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் நிகழ்ச்சியும், பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து நாம சங்கீர்த்தனம் நடைபெறுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

