Skip to content

ஆட்டோ மீது பனைமரம் விழுந்து விபத்து… ஓட்டுநர் உயிரிழப்பு…

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆட்டோவை அப்துல் வாஹித்(38) பயணியை ஏற்றிக்கொண்டு அயனாவரம் சென்றுகொண்டிருந்தார். கீழ்ப்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள பனைமரம் ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது விழுந்தது.

இதில், ஆட்டோவின் முன் பகுதி கடுமையாக சேதமடைந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் அப்துல் வாஹித் பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோவில் பயணம் செய்த பயணி காயமின்றி உயிர்தப்பினார். கரையான் அரித்ததால் பனைமரம் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!